இன்றைய பாடத்தில் Form ஐ நமக்கு விரும்பிய மாதிரி அழகுபடுத்தி பார்ப்போம்.உங்களுக்கு முன்தோற்றம் எப்படி அமைய வேண்டுமோ...அதுமாதிரி ஒரு picture ஐ உருவாக்கி கொள்ளுங்கள்.உதாரணத்திற்கு Tune Up Utilities 2007 மென்பொருளின் முன்தோற்றத்தை பாருங்கள்.

நான் கீழ் உள்ள படத்தை பயன்படுத்தி செய்து காட்டுகிறேன்.

 >> VB ஐ Open செய்து கொள்ளுங்கள்.
>> Form , Properties Window வில் BorderStyle இற்கு 0 - None கொடுங்கள்.
 
>> Form , Properties Window வில் Picture இற்கு நீங்கள் உருவாக்கியதை கொடுங்கள்.


>>அந்த Picture இற்கு ஏற்றமாதிரி Form ஐ சரிசெய்து கொள்ளுங்கள்.


இவ்வளவையும் ஒழுங்காக செய்து இருந்தால் உங்களுக்கு ஒரு பிரச்சினை தோன்றி இருக்கும் அந்த பிரச்சினை என்ன அப்படி என்று பார்த்தால் Form, ஓர் இடத்தில் இருந்து இன்னுமோர் இடத்திற்கு நகராமல் இருக்கும் இதை சரி செய்வதற்கு,

கீழ் உள்ள code களை Form இல் நான் சொல்லும் இடத்தில் copy  & paste  செய்து கொள்ளுங்கள்.

>> General




Dim Moving As Boolean
Dim mX As Long
Dim mY As Long


 >> Form_MouseDown

 
Moving = True
 mX = X
 mY = Y
 
 >>Form_MouseMove

If Moving Then
  Me.Left = Me.Left + X - mX
  Me.Top = Me.Top + Y - mY
End If

 >> Form_MouseUp

Moving = False

அவ்வளவுதான்....இனி F5 ஐ Press பன்னி இயக்கி , Form ஐ ஓர் இடத்தில் இருந்து இன்னுமோர் இடத்திற்கு நகர்த்தி பாருங்கள்... Form நகர்வதை நீங்கள் அவதானிப்பீர்கள்.

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top