இப்போது, நேரமின்மை காரணமாக முன்புபோல் பதிவு எழுத முடியவில்லை! இருந்தாலும் என்னால் எழுத முடியாமலும் இருக்க முடியவில்லை (உங்கள் அன்பு தொல்லையால்) சரி நேராக விஷயத்திற்கு வருகிறேன்..இந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கும் அனைத்தையும் செய்து முடிப்பதற்கு எப்டியும் 3 வாரங்கள் எடுக்கும். ஆகவே இதை Bookmarks செய்துவிட்டு,  இதில் குறிப்பிட்டு இருக்கும் ஒவ்வொன்றையும் படிப்படியாக செய்யுங்கள்.சந்தேகம் இருந்தால் Help.nimzath.com இல் கேட்கவும்.

இலங்கையில் இருந்து கொண்டு Paypal மூலம் நமது வங்கிக்கு பணத்தை பெற்றுக்கொள்ள முடியுமா? என்றால்....தற்போதைக்கு நேரடியாக முடியாது ஆனால் பணத்தை மட்டுமே அனுப்ப முடியும். ஆனாால்  payoneer என்ற தளம் மூலம் அந்த பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்..இது பற்றிய  ஒரு அறிமுகத்தை இன்று உங்களுக்கு வழங்கப்போகிறேன்,விரிவாக எழுத நேரம் இல்லை மண்னிக்கவும்.
எல்லாம் சரிதான், நமக்கு யாருப்பா இணைத்தில் இருந்து பணம் அனுப்புவார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு வந்து இருக்கும்.இது பற்றி அடுத்த பதிவில் , கூறுகிறேன்.. பொறுமையாக இருங்கள் அதுவரைக்கும் கீழ் உள்ள முறையை செய்து வைத்துக்கொள்ளுங்கள்.ஏன் என்றால் பணத்தை விரைவாக பெற்றுக்கொள்ள உதவியாக அமையும்.

இங்கு சென்று முதலில் ஒரு payoneer கணக்கு திறந்து கொள்ளுங்கள். அதில் உங்களுடைய உண்மையாக தகவல்களை கொடுக்கவும்.ஏன் என்றால் விரைவாக உங்களுடைய கணக்கை அவர்கள் ஏற்றுக்கொள்ள வசதியாக இருக்கும்.

உங்களுடைய கணக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின், அவர்களிடம் இருந்து ஒரு mail வரும்.அதில் ஒரு சில கேள்வியையும் , உங்களுடை N.I.C ஐ கேட்டு இருப்பார்கள் , உங்களுடை N.I.C ஐ  Scan அல்லது Mobile மூலம் படம் பிடித்து , Upload செய்து கொள்ளுங்கள்.இதை கொடுத்தால் மட்டுமே, நீங்கள் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

இப்போது , உங்கள் பெயரில் ஒரு Master card இணை ,  வீட்டுக்கு அவர்கள் அனுப்பி இருப்பார்கள்.இது எப்படியும் 2-3 வாரத்திற்குல் உங்களுக்கு கிடைத்துவிடும்.அந்த Card இல் 16 இலக்கம் மேலுக்கு எழுதப்பட்டிருக்கும்.அதில் இருதியில் முடியும் 4 இலக்கத்தை அவர்கள் Verification இற்காக கேட்பார்கள்.Card பெற்ற பின் அதை கொடுத்து Activate செய்து கொள்ளுங்கள்.

சரி, இப்போது payoneer கணக்கை வெற்றிகரமாக திறந்து Activate  உம் செய்துவிட்டோம்.இதை எப்படி Paypal உடன் இணைப்பது என்று பார்ப்போம்.

Paypal இற்கு சென்று ஒரு கணக்கை Us நாட்டை கொடுத்து திறந்து கொள்ளுங்கள். (முகவரி பிழை என்றாலும் பரவாயில்லை) zip code போன்றவற்றை இணைத்தில் தேடி போட்டுக்கொள்ளுங்கள். 

அடுத்து Paypal இல் Login செய்து , Profile இல் Bank Account இனை Add செய்து கொள்ளுங்கள்.அதற்கு தேவையான Routing , Account number ஆனாது உங்களுக்கு payoneerஆரம்பத்தில்  mail பன்னி இருக்கும் , உங்களுடைய inbox இல் சென்று பாருங்கள்.அல்லது payoneer  இல் login செய்துவிட்டு, Receive Money >> US Payment Service சென்று பார்வையிடுங்கள்.

இப்போது உங்களுடைய payoneer கணக்கிற்கு Paypal ஆனாது,  உங்கள் வங்கி கணக்கை உறுதிப்படுத்த 2 விதமான தொகையை அனுப்பும், அது என்ன என்று பணம் பெற்றுக்கொண்ட பின், Paypal இல் Login செய்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான்...இப்போது வெற்றிகரமாக இலங்கையில் இருந்து கொண்டு  Paypal மூலம் வரும் பணத்தை payoneer Master Card மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.நம்முடைய Paypal கணக்கிற்கு யாருப்பா பணம் அனுப்புவர்கள் என்ற உங்கள் கேள்விக்குறிய பதிலை அடுத்த பதிவில் எதிர்பாருங்கள்.

பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

10 comments Blogger 10 Facebook

 1. உண்மையில் மிகவும் பயனுள்ள தெளிவான பதிவு....!!! உங்கள் அடுத்த பதிவையும் விரைவாக எதிர் பார்கிறேன்....!!!

  //Paypal இற்கு சென்று ஒரு கணக்கை Us நாட்டை கொடுத்து திறந்து கொள்ளுங்கள். (முகவரி பிழை என்றாலும் பரவாயில்லை) zip code போன்றவற்றை இணைத்தில் தேடி போட்டுக்கொள்ளுங்கள். //

  மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள படி US நாட்டை கொடுத்து கணக்கை ஆரம்பித்தால் எமது முகவரியாக எந்த முகவரியை கொடுப்பது....??? US நாடு/பிரதேசத்திற்குரிய zip code-ஐ கொடுக்கனுமா...?? அல்லது எமது நாடு/ பிரதேசத்திற்குரிய zip code-ஐ கொடுக்கணுமா...??? ( நான் இலங்கையில் வசிக்கிறேன்.)

  ReplyDelete
  Replies
  1. Brother!

   முகவரி, உங்களுக்கு தோனுவதை கொடுங்கள் (உதாரணமாக123 Main Street என கொடுக்கலாம்)

   US நாடு/பிரதேசத்திற்குரிய zip code ஐ சரியாக கொடுத்தால் மட்டுமே அதில் கணக்கு திறந்து கொள்ள முடியும்...

   Delete
 2. Payoneer கார்ட் பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டுமா.

  ReplyDelete
  Replies
  1. முதலில் அட்டையை பெறும் போது பணம் செலுத்தவேண்டிய அவசியம் இல்லை!.....

   Delete
  2. ((((இலங்கையில் இருந்து கொண்டு Paypal மூலம் வரும் பணத்தை payoneer Master Card மூலம் பெற்றுக்கொள்ள முடியும்)))) அந்த payoneer Master Card ஐ பயன்படுத்தி எவ்வாறு, எங்கே பணம் பெறுவது

   Delete
  3. @sarfan
   Master Card போட்ட எந்தவொரு ATM இலும் பணத்தை பெற முடியும்.ஆனால் உங்கள் அந்த அட்டையில் நீங்கள் கோரும் பணம் இருக்க வேண்டும்...

   Delete
  4. நீங்கள் அந்த அட்டையை பயன்படுத்தி உள்ளீர்களா?
   ஒரு முறை ATM பயன்படுத்த கட்டணம் எவ்வளவு?

   Delete
  5. ATM Withdrawal $3.15 * Per Trx When withdrawal is requested

   ATM Decline Fee $1.00 Per Trx When ATM request is decined

   ATM Balance Inquiry Fee $1.00

   Delete
 3. கஸ்டப்பட்டு உழைக்குறது ATM கே பெய்டுமே?

  ReplyDelete
  Replies
  1. இல்லை!
   ATM இல் அதை பயன்படுத்தாமல்... இப்படியும் பணத்தை அதில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

   நண்பர்களுக்கு அந்த Card ஐ பயன்படுத்தி Reload பன்னிக்கொடுக்கலாம்...(உதாரணம் Dialog Number இற்கு Reload செய்ய வேண்டும் என்றால் www.dialog.lk இற்கு சென்று Mobile Number,Amount,Card No, போன்றவற்றை கொடுத்து Reload பண்னலாம்)

   பின் அவர்களிடம் இருந்து அதற்குறிய பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். (அவர்கள் தந்தா சரிதான்...)

   Delete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top