பாதுகாப்பான முறையில் Google இடம் Domain  வாங்க போகலாம் வாங்க! , Google இடம் Domain வாங்க போவது சரி,  அது என்ன பாதுகாப்பான முறை? என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது.
 
நாம் ஏற்கனவே பார்த்த தொடர்களின் படி Google என்பது மிகவும் நம்பகரமான இணையதளம் அது சரி.வேறு என்ன? உங்கள் Card ஐ Online இற்கு அக்டிவ் பன்னும் போது ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டு இருக்கும் (பொதுவாகவே எல்லா வங்கிகளிலும் இந்த நிபந்தனை உண்டு) , Card ஐ இணையத்தில் பயன்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு (திருட்டுக்கு) வங்கி எந்த வகையிலும் பொறுப்பு கூறாது என்ற நிபந்தனை (ஐயோ! இது எனக்கு முன்பே தெரியாமல் போய்விட்டதே என்று சொன்னால்......அதான் இப்ப தெரிந்து விட்டதே!விடுங்க...)
நீங்கள் Online இற்கு Card  ஐ அக்டிவ் செய்த காலம் (அதிக பட்சம் 7 நாட்கள்) முழுவதும் Card ஐ  பாதுகாக்கும் பொறுப்பை வங்கி உங்களிடம் ஒப்படைத்து விட்டது.(வங்கி ஏன் இப்படி செய்து இருக்கிறது என்று சென்ற தொடர்களில் பார்த்து இருந்தோம்) 


இணையத்தில் பாதுகாப்பான முறையில் பணப்பரிமாற்றங்கள் செய்து கொள்வதற்கு  என்று avast! Internet Security இல் ஒரு வசதி உண்டு அதான் Avast Safe-zone! பணம் கொடுத்து வாங்க சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். ஒரு மாத காலத்திற்கு இது இலவசமாக கிடைக்கிறது மேலதிக விபரம் இங்கே.இதற்குறிய லைசன்ஸ் (1 வருடத்திற்குறியது)  nimzath.com பேஸ்புக் ரசிகர் பக்கத்தில் வழங்கப்படும்.தொடர்ந்து இணைந்து இருங்கள்.


இதன் மூலம் நீங்கள் பணப்பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபடும் போது உங்களுக்கு உச்ச பாதுகாப்பை முடிந்தளவு வழங்கிறது.Safe Zone ஐ மூலமாக www.Blogger.com இற்கு சென்று

 Settings >> Publishing >>  Custom Domain





விரும்பிய பெயரை கொடுத்து,  Check Availability என்பதை க்ளிக் செய்து கிடைக்கிறதா என்று பாருங்கள்.


கிடைத்தால் , அந்த Domain பற்றிய தகவல்களை Step 2 இல் கொடுங்கள்

I have read the GoDaddy.com Universal Terms of Service என்பதற்கு டிக் செய்து விட்டு



இப்போது உங்களுடைய அட்டை பற்றிய விபரம் எல்லாம் கேட்கும்.இதற்கு பகுதி - 02  இல் சொன்ன மாதிரி செய்து விட்டு Agree and Continue என்பதை கொடுங்கள்.




வெற்றிகரமாக பதிவு செய்து கொண்டால், உங்களிடம் Google ஆனது ஒருவருடத்திற்கான கட்டணமான $10 ஐ அரவிட்டுக்கொள்ளும்.அதே நிமிடத்தில் நீங்கள் பதிவு செய்து கொண்ட Domain செயற்பட ஆரம்பிக்கும்.ஆனால் உங்களுடைய பழைய முகவரியான .blogspot இல் இருந்து உங்களுடைய புதிய Domain இற்கு மாற 3 நாட்களாவது செல்லும்.


மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.முடிந்தளவு பதில் சொல்கிறேன்.இந்த தொடரை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி வையுங்கள்.



5 comments Blogger 5 Facebook

  1. சார்! வணக்கம்! அவஸ்ட்-ல் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்று தெரியாது. நான் இந்த பதியுலகில் புதியவன். இப்படி மாறுவதால் என்ன நன்மை? என்று அறிய ஆவல். நிறைய விஷயம் கேட்க வேண்டும். முடிந்தால் Gmail chat-ல் சந்திக்கலாம். (pdhanabalandgl@gmail.com) நன்றி!
    என் வலையில்:
    "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

    ReplyDelete
  2. பிரயோசனமான பதிவு.. நன்றி

    ReplyDelete
  3. நன் எதிர்பார்த்த பதிவு நன்றி ....

    ReplyDelete
  4. @ veedu
    அந்த பட்டியலில் என்னையும் இணைத்து கொண்டமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  5. Google Search Bar il Namathu
    inaya thala Mukavariyai eppadi Add Pannuvathu

    Therinthaal SOllauvm mikka Nari

    My E-mail Address
    sbsinfo@gmai.com

    Nantri

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top