Microsoft Windows Operating System இணை  பயன்படுத்தி ஏதாவது ஒன்றை Type செய்யும் போது சில நேரம் எதர்ச்சையாக கீச் என்று Sound கேட்டு Sticky keys என்று ஒரு Window open ஆகுவதை நீங்கள் அவதானித்ததுண்டா?

  • இது எவ்வாறு Open ஆகிறது? 
  • இதனுடைய பயண்பாடு என்ன?
  • இதனை எவ்வாறு OFF செய்வது?

 என்று பார்ப்போம்.

உங்கள் நண்பர்களிடம் மறக்காமல் Share செய்யுங்கள்.இந்த விடயங்களை அவா்களும் கற்றுக்கொள்வதற்கு உதவியாக அமையும்.

Sticky keys என்றால் என்ன?

Sticky keys என்பது Microsoft Windows இல் காணப்படும் ஒரு Accessibility Feature ஆகும். இது நீங்கள் பயன்படுத்தும் Shortcut key இல் ALT, SHIFT, CTRL, Windows Logo Key போன்றவற்றில் ஏதாவது Key காணப்பட்டால் அதனை ஒரே நேரத்தில் அழுத்தி பிடிக்க தேவையில்லை மாறாக ஒரு முறை Press செய்தால் போதும்.

உதாரணம் CTRL + SHIFT + ESC Key இணை பயன்படுத்தி TASK Manager இணை Open செய்ய மேற்சொன்ன Key இணை ஒரே நேரத்தில் அழுத்தாமல் CTRL Press செய்தபின் அந்த Key இணை விட்டுவிட்டு SHIFT Key இணை Press செய்யலாம் அதனை தொடர்ந்து அதை விட்டபின் ESC Key இணை Press செய்யலாம்.

Sticky Keys இணை எவ்வாறு Open செய்வது?

Keyboard இல் Shift key இணை நீங்கள் ஐந்து முறை Press செய்வதன் மூலம் இந்த Accessibly இணை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இது சாதாரண நபர்களுக்கு பிரச்சினையில்லை ஆனால் ஒரு கையால் மாத்திரம் வேலை செய்பவர்களுக்கு அல்லது விரலில்  காயம் ஏற்பட்டிருக்கும் போது ஒரே நேரத்தில் Press செய்வது என்பது இயலாத ஒரு காரியம் .

ஐந்து முறை Shift Key இணை Press செய்யும் போது இவ்வாறாக ஒரு Window தோன்றும் அதில் Yes என்பதை click செய்யவும்.


இப்போது Keyboard இல் இருந்து நீங்கள் CTRL அல்லது SHIFT அல்லது ALT அல்லது Windows Logo Key ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை Press செய்தால் Sound ஒன்று கேட்பதை நீங்கள் அவதானிக்கலாம்.

Sticky Keys இணை OFF செய்வவது எப்படி?

SHIFT Key இணை மீண்டும் ஐந்து முறை Press செய்யுங்கள் Sticky keys OFF ஆகிவிடும்.

குறிப்பு :- 

Shift key இணை ஐந்து முறை Press செய்யும் போது Stick keys Open ஆகா விட்டால்  Settings இற்கு வரவும். (Shortcut key - windows + S) அதில் Easy of Access என்பதை தெரிவு செய்யவும்.



பின் Keyboard இணை தெரிவு செய்யவும்.



அடுத்து Allow the Shortcut key to start Sticky Keys என்பதற்கு டிக் செய்து கொள்ளவும்.



கவனிக்கவும் இந்த Option ஆனது untick செய்யப்பட்டால் Shift Key இணை ஐந்து முறை Press செய்தால் Sticky keys Open ஆகாது.


NimTech இன் WhatsApp குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும்


0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top