இன்று

 1. Entities என்றால் என்ன?  

 2. Void Element என்றால் என்ன?  

 3. H1 TAG எப்போது பயன்படுத்த வேண்டும்.

 4. Title TAG மற்றும் Heading TAG ஆகியவற்றுக்கு இடையில் காணப்படும் வேறுபாடுகள் என்ன? 
போன்ற விடயங்களை பார்ப்போம்.

ஏற்கனவே எழுதப்பட்ட


HTML Entities

HTML Page இல் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடைவெளியை  வழங்கும் போது அதனை Web Browser ஆனது கட்சிப்படுத்தாது.


உதாரணம்

<!DOCTYPE html>

<html>

<head> <title>Demo</title></head>

<body>

MHM                 NIMZATH

</body>

</html>


Web Browser இல் MHM NIMZATH இவ்வாறே தோன்றும்.செய்து பாருங்கள்.


ஒன்றுக்கு மேற்பட்ட இடைவெளி தேவையென்றால் &nbsp; என்று Type செய்யவும்.இதனை ஒரு முறை டைப் செய்தால் ஒரு இடைவெளி மாத்திரமே  கிடைக்கும் ஆகவே தேவைக்கு ஏற்றாப்போல் அவ் எண்ணிக்கையை அதிகரிக்கவும்.

 • இதனை HTML Entities என்று அழைப்பார்கள்.

 • Entities  ஆனது  & குறியீட்டுடன் ஆரம்பமாகும் பின் அதனுடைய பெயர் மற்றும் இறுதியில் ; உடன் முடியும்.

 • ஓரு Web Page இல் ஒன்றுக்கு மேற்பட்ட Entities இனை பயன்படுத்தலாம்.

 • இது Case Sensitive ஆகும்.

 • Copyright Symbol (© )தேவையென்றால் &copy; என்று டைப் செய்யவும்.

 • Registered trademark Symbol (®)தேவையென்றால் &reg; என்று டைப் செய்யவும்.

 • &pound; &euro; &yen; &cent; இந்த Entitles இனையும் முயற்சி செய்து பாருங்கள்.

உதாரணம்
Void Element

HTML Page இல் அடுத்த Line இற்கு செல்வதற்கு Enter key இனை Press செய்தால் அது Web Browser இல் காட்சிப்படுத்தப்படாது.இதற்கு </br> என்ற TAG இனை பயன்படுத்தவும்.

 • இதனை ஒரு முறை பயன்படுத்தினால் ஒரு Line இடைவெளி கிடைக்கும்.தேவைக்கு ஏற்றாப்போல் பயன்படுத்தவும்.

 • இது Empty Element அல்லது Self Closing Element அல்லது Void Element என்றும் அழைக்கப்படும்.

 • இது போன்று இன்னும் இருக்கின்றது அடுத்த அடுத்த தொடரில் பார்ப்போம்.
உதாரணம்
Heading TAG


HTML இல் பயன்படுத்தப்படும் Headings ஆனது மொத்தமாக 06 காணப்படுகின்றது.
 • இந்த TAG ஆனது இவ்வாறு  <h1>  any text </h1>  காணப்டும்.

 • H1 ஆனது உங்களது Page இல் உள்ள விடயங்களை அடையாளம் காணும் வகையில் இருத்தல் வேண்டும். 

 • Title TAG மற்றும் Heading TAG ஆகிய இரண்டும் ஒன்றல்ல.

 • Title TAG ஆனது Web Browser இன் TAB இலும் Search Engine இலும் Social Media இல் Share செய்யும் போதும் மற்றும் Bookmark செய்யும் போதும் தோன்றுவதாகும்.

 • ஆனால் Heading ஆனது குறித்த Web Page இல்  தடித்த மற்றும் ஏனையை எழுத்துக்களுடன் ஒப்பிடும் போது சற்று பெரிதாக காணப்படும்.

 • Search Engine ஆனது Heading TAG இனை விட Title TAG இற்கு முக்கியத்துவம் அதிகம் வழங்கும்.

 • ஒரு Page இல் ஒரு H1 TAG காணப்டுதல் சிறந்தது.

 • ஒரே Page  இல் ஒன்றுக்கு மேற்பட்ட Headings காணப்படும் போது H2,H3,H4 இவ்வாறு அந்த TAG இனை மாற்றி பயன்படுத்த வேண்டும்.


அடுத்த பதிவில் பல புதிய TAG களை Body  இற்குல் பயன்படுத்தி பார்ப்போம்.இந்த தொடரை தொடர்ச்சியாக எழுத உங்கள் ஆதரவை (Like, Comment and Share) தாருங்கள்.

NimTech இன் WhatsApp குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும்


பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்.
0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top