ஒரு பிரச்சினை ஒன்று இருந்தால் நிச்சயம் அதற்கு ஒரு தீர்வும் இருக்கும்தானே அது Winrar இலும் இருக்கின்றது,winrar இல் ஒடுக்கப்பட்ட கோப்பை வேறுஒருவருக்கு நாம் கொடுக்கும் போது அவருடைய கணினியில் அவர் அந்த ஒடுக்கப்பட்ட கோப்பை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர winrar அவருடைய கணினியிலும் இருக்க வேண்டும் அல்லது Winrar ஐ அவரும் கணினியில் நிறுவ வேண்டும்.

இது உங்களுக்கு தெரிந்ததுதான் ஆனால் ஒடுக்கப்பட்ட File ஐ SFX ஆக மாற்றுவது பற்றி தெரியுமா? நீங்கள் ஒடுக்கப்பட்ட கோப்பை SFX ஆக மாற்றுவதன் மூலம் winrar மென்பொருள் உதவியின்றி அந்த கோப்பை பழைய நிலைக்கு கொண்டுவர முடியும். சரி இதனை winrar மூலம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
01.Folder இன் மீது Right Click செய்து விரியும் மெனுவில் Add to Archive என்பதை கிளிக் செய்யவும்

02.Archiving option என்பதற்குல் Create SFX archive என்பதற்கு டிக் செய்து கொள்ளுங்கள்.
03.Advanced Tab ஐ Click செய்யுங்கள்
04.SFX Option...என்ற Button ஐ கிளிக் செய்யுங்கள்
05.Text and Icon என்ற Tab ஐ Click செய்யுங்கள்
06.இங்கு Title of SFX Window இற்கு கீழ் இருக்கும் பெட்டியில் ஒடுக்கப்பட்ட கோப்பின் பெயரையும்,Customize SFX Logo and Icon என்ற பிரிவில் Logo மற்றும் Icon ஐ தெரிவு செய்து Ok Button ஐ கிளிக் செய்தால் சரி.

1 comments Blogger 1 Facebook

  1. அதாவது, இன்ஸ்டால் செய்யப்பட்ட ஒரு software 'ஐ திருப்பியும் software ஆக மாற்றலாம். நன்றி

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top