தேடுவது என்று சொன்னால் நம்மில் பலர் செல்லுமிடம் கூகிள் தான்.இன்று நாம் பார்க்கப்போவது கூகிள் மூலம் இலகுவாக தமிழில் டைப் செய்து தேடுவது எப்படி என்று. Search Engine களில் ஆங்கில சொற்களை நேரடியாக டைப் செய்து தேடுவது மாதிரி தமிழ் சொற்களை டைப் செய்து தேட முடியாது.அப்படி Search Engine இல் தமிழில் தேட வேண்டுமாயின் வேறு ஒரு இடத்தில் டைப் செய்து அதை யுனிகோடுக்கு மாற்றி அதை copy செய்து, paste செய்து கொள்ள வேண்டும்.இந்த முறையானது நமக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றது.
 

ஆனால் Google Search Engine இல்  தமிழில் டைப் செய்து தேடும் வசதி இருக்கின்றது என்பது நம்மில் பலருக்கு தெரியாது.Google Search Engine இல் தமிழில் டைப் செய்து தேடுவதற்கு

http://www.google.lk/ என்பதற்கு சென்று,தமிழ் என்பதை கிளிக் செய்யுங்கள்.உதாரணமாக நீங்கள்  thamil என்று டைப் செய்தீர்கள் என்றால், கீழே தமிழ் சம்பந்தமான முடிவுகளை காணலாம்.இது தமிழில் தேடும் சந்தர்ப்பத்தில் மிகவும் இலகுவாக அமையும்.
இனி தமிழில் தேடுவதற்கு யுனிகோடுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை,நேரடியாகவே டைப் செய்து கொள்ளலாம்.

7 comments Blogger 7 Facebook

 1. Hello Boss,

  You can try in http://www.google.co.in/ select Tamil

  ReplyDelete
 2. நானும் இம்முறையைத்தான் வழமையாக பயன்படுத்தி வருகின்றேன்
  பதிவுக்கு நன்றிகள்

  ReplyDelete
 3. ///Search Engine களில் ஆங்கில சொற்களை நேரடியாக டைப் செய்து தேடுவது மாதிரி தமிழ் சொற்களை டைப் செய்து தேட முடியாது.அப்படி Search Engine இல் தமிழில் தேட வேண்டுமாயின் வேறு ஒரு இடத்தில் டைப் செய்து அதை யுனிகோடுக்கு மாற்றி அதை copy செய்து, paste செய்து கொள்ள வேண்டும்.இந்த முறையானது நமக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றது.///

  தோழா ஒரு தகவலுக்காக சொல்கிறேன், நீங்கள் எந்தக் காலத்திலிருக்கிறீர்களென தெரியவில்லை, nhm writer உதவியோடு நேரடியாக கூகிளில் தமிழில் உள்ளிட்டு தேடலாம், என்னைப் போன்ற லினக்ஸ் பயனாளர்கள் ibusமூலமாக தேடல் பெட்டியில் நேரடியாகவே உள்ளிட இயலும்.

  இலங்கையின் தளத்தில் இவ்வசதியிருப்பது மகிழ்ச்சியான செய்தி.

  ReplyDelete
 4. பிரயோசனமான தகவல்.நன்றி,வாழ்த்துக்கள்.
  http://abuanu.blogspot.com/

  ReplyDelete
 5. நண்பா முடியும் என்பதை சேர்க்காதது என் தவறுதான். விண்டோஸ் மூலம் உள்ளீட்டு மொழியை தமிழ் என்பதை தெரிவு செய்து கொண்டால்,நேரடியாக கூகிளில் தமிழில் உள்ளிட்டு தேடலாம்.நன்றி

  ReplyDelete
 6. நல்ல தகவல் வாழ்த்துகள் -மீராப்ரியன்

  ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top