01.நாம் ஏற்கனவே பார்த்தது ஒடுக்கப்பட்ட கோப்பை SFX ஆக மாற்றுவது பற்றி, இன்று நாம் பார்க்கப்போவது winRAR இல் ஒடுக்கப்பட்ட கோப்பின் அளவை இன்னும் அதை விட குறைப்பது எப்படி என்று பார்ப்போம்.கோப்புக்களை ZIP களாக ஒடுக்குவதை விட RAR கோப்புக்களாக ஒடுக்கினால் அதனுடைய அளவு குறையும் என்று நாம் எல்லோரும் அறிந்து வைத்திருக்கின்றோம்.

ஆனால் நாம் நினைத்துக்கொண்டிருப்து என்னவென்றால் கோப்புக்களை RAR ஆக ஒடுக்குவதுதான் அதன் கடையசி அளவு என்று,அப்படி என்னிவிடாதீர்கள் அதை விடவும் இன்னும் குறைக்க முடியும்.winRAR இல் தான் இந்த சிறப்பு உண்டு அதை நாம் தான் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.சரி இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

ஒடுக்கப்பட வேண்டிய Folder இன் மீது Right click செய்து தோன்றும் மெனுவில் Add to Archive என்பதை கிளிக் செய்யவும்
Archiving Options என்பதற்குள் Create solid archive என்பதற்கு டிக் செய்து விட்டு,Compression method என்ற combo box இல் Bestஎன்பதை தெரிவு செய்து விட்டு ok button ஐ click செய்தீர்கள் என்றால் சரி.

02.ஒரு பெரிய கோப்பு ஒன்று இருக்கி என வைத்து கொள்ளுங்கள்,இதை நீங்கள் winRAR இல் ஒடுக்க நினைக்கின்றீர்கள் இதன் அளவு ஒடுக்கப்பட்ட பின்னர் அன்னளவாக எவ்வளவாக இருக்கும் என அறிந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.அது மட்டுமில்லாமல் கோப்புக்கள் சில சமயங்களில் ஒடுக்கப்ட்ட பின்னர் முன்னர் இருந்ததைவிட ஒரு சில MB கள் தான் குறைந்து இருக்கும் அதை நாம் முன்கூட்டியே தெரிந்து கொண்டால் அந்த கோப்பை ஒடுக்குவதா? இல்லையா? என முன்கூட்டியே தீர்மானிக்க முடியும் அல்லவா?சரி இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

winRAR ஐ Open செய்து ஒடுக்கப்பட வேண்டிய கோப்பின் இடத்திற்கு சென்று,அதன் மீது Right Click செய்து தோன்றும் மெனுவில் Show information ஐ கிளிக் செய்து,பின்னர் தோன்றும் மெனுவில் Estimate என்ற Button ஐ Click செய்தீர்கள் என்றால் அது ஒடுக்கப்பட்ட பிறகு அன்னளவாக என்ன அளவில் வரும் என்பதை காட்டும்.

3 comments Blogger 3 Facebook

  1. சில கோப்புகளை திறக்க முடியவில்லையே. ஏன்? மேலும் சில கோப்புகள் பாஸ்வேர்ட் இல்லாமல் திறக்க முடிவதில்லையே?

    ReplyDelete
  2. கோப்புக்கள் damage ஆன திறக்க முடியாது

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top