இன்று நாம் vb ஐ பயன்படுத்தி பின்வரும் பிரச்சினைகளை ஆய்வு செய்து, அதற்கு தேவையான code களை எழுதுவோம். பிரச்சினை என்ன வென்றால் 01. VB இல் நாம் ஒரு  username , password   உருவாக்கி அந்த username , password     ஐ வழங்கினால் வேறு ஒரு Form open ஆக வேண்டும்.02.அந்த form இல் ஏற்கனவே இருந்த Username, Password ஐ மாற்றியமைக்க வேண்டும்.

நான் ஏற்கனவே இதற்கான  code களை எழுதிவிட்டேன் Download செய்து பாருங்கள் (Run செய்தும் பார்க்கவும் UserName = Nimzath , Password = 123123) அதற்கு பிறகு கீழே படிக்கவும்

படத்தில் உள்ளதுபோல் வடிவமைத்து கொள்ளுங்கள்

Form1

 Form2

Form1 இல் பின்வரும் பெயர்களை மாற்றியமைக்கவும்

Form1          =    frmlog
Text1            =    txtUserName
Text2            =    txtPassword
Command1  =    cmdOK
Command2  =    cmdCancel

txtPassword , Properties இல் passwordchar என்பதில் இந்த * குறியீட்டை இனைத்துக்கொள்ளுங்கள்  

cmdOK , Properties இல் Default = True என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்


frmlog , Properties இல் BorderStyle ஐ Fixed single ஆக மாற்றி கொள்ளவும்


Form2 இல் பின்வரும் பெயர்களை மாற்றியமைக்கவும்

Form2         =    frmcp
Text1           =    txtnun
Text2           =    txtou
Text3           =    txtop
Text4           =    txtnp
Text5           =    txtcp
Command1  =    cmdsave1
(user Name save)
Command2  =    cmdsave
(password save)
Command3  =    cmdend

BorderStyle , passwordchar என்பவற்றை மாற்றிக்கொள்ளவும்

frmlog (Form1),cmdOK இற்கான codeif condition பற்றி தெரிந்து கொள்ள பக்கம் 46 ஐ பார்க்கவும்

Run (F5)  செய்து பார்க்கவும்.UserName = Nimzath , Password = 123123 , நாம் இப்போது முதலாவது பிரச்சினையை தீர்த்துள்ளோம் அதாவது vb ஐ பயன்படுத்தி   ஒரு Username, Password ஐ  தயார்  செய்து விட்டோம்.(GetSetting பற்றி விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது)


frmcp (Form2), cmdsave1 இற்கான code


frmcp (Form2), cmdsave இற்கான code

இப்போது Run (F5)  செய்து பார்க்கவும்.UserName = Nimzath , Password = 123123 , இரண்டாவது பிரச்சினை அதாவது ஏற்கனவே உள்ள Username, Password   ஐ மாற்றி அமைத்துள்ளோம்.
விளக்கம்
அது என்ன SaveSetting?

தகவல்களை Registry இல் சேமித்து வைக்க உதவுகிறது.எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்

SaveSetting "Project-Login", "login", "password", txtnp

Project-Login = நீங்கள் தயாரித்து இருக்கும் மென்பொருளின் பெயரை இடவும் (இப்படியும் வழங்க முடியும் App.EXEName )
login = அது உங்களுக்கு எந்த இடத்தில் தேவை
password = சேமிக்க வேண்டிய பெயர்
txtnp = அதனுடைய பெறுமதி என்ன?(நான் txtnp  என்ற TextBox இல் உள்ள Text ஐ வழங்கியுள்ளேன்)

இப்படி நினைத்துக்கொள்ளுங்கள்
SaveSetting "Project-Login", "login", "password", txtnp
SaveSetting   "C:\Project-Login\login\password.doc"

அது என்ன GetSetting?

ஏற்கனவே  Registry இல் சேமித்து வைத்த தகவளை பெற உதவும்.எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

இப்படி நினைத்துக்கொள்ளுங்கள்
oldpwd = GetSetting("Project-Login", "login", "password", "123123")
open =  "C:\Project-Login\login\password.doc"

oldpwd = நீங்கள் சேமித்து வைத்த தகவல் எங்கு வேண்டும் (நீங்கள் இதனுடைய பெறுமதியை காண வேண்டும் என்றால் இப்படி செய்யவும் Text1.Text )

Project-Login = நீங்கள் தயாரித்து இருக்கும் மென்பொருளின் பெயரை இடவும் (நீங்கள் ஏற்கனவே என்ன பெயர் வழங்கியுள்ளீர்களோ அதே பெயரை இங்கும் இடவும். கடினம் என்றால் இதை App.EXEName ஐ பயன்படுத்தவும்.)

login = அது உங்களுக்கு எந்த இடத்தில் தேவை (ஏற்கனவே அதாவது SaveSetting  செய்யும் போது வழங்கி பெயர்)

password = சேமித்த பெயர் (ஏற்கனவே அதாவது SaveSetting  செய்யும் போது வழங்கி பெயர்)

123123 = உங்களுடைய தகவல் நீங்க சொன்ன இடத்தில் இல்லையாயின் அதனுடைய பெறுமதி
இதைப்பற்றி அடுத்த பாடத்தில் பார்ப்போம்


5 comments Blogger 5 Facebook

 1. விளக்கங்களை தமிழில் தருவது மிகவும் இலகுவாக இருக்கிறது...... அடுத்த பதிவை எதிர்பார்த்திருக்கிறோம்....
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. விசுவல் பேசிக் கற்பதற்கு முன் Flow Chart பற்றிய தெளிவான அறிவு இருக்கவேண்டும்... ஆகவே முதலில் Flow Chart பற்றி சிறிது தெளிவு படுத்தலாமே?

  ReplyDelete
 3. Mathuran, விரைவில்.....

  ReplyDelete
 4. vbபற்றிய தொடர் அருமை. தொடர் ச்சியாக எதிர் பார்க்கிறோம்

  ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top