இன்றைய மென்பொருளை நீங்கள் பயன்படுத்தினால் உங்கள் பைல்களை யாரும் திருட மாட்டர்கள் அதாவது நம்முடை pen Drive ஐ ஒருவரிடம் கொடுக்கும் போது அதில் நாம் நிறைய தகவல்களை சேமித்து வைத்து இருப்போம்.எடுத்துக்காட்டாக Word Document,  Excel Worksheet, PowerPoint Presentation,Pdf,mp3,video,image,softwares,games போன்றவைகள் இருக்கலாம்.இப்படியான சில முக்கியமான பைல்களை  யாரிடமும் சென்று விடக்கூடாது என்று சில நேரங்களில் நாம் நினைக்கலாம். அடுத்தவர் உங்கள் பைல்களை திருடாமல் இருக்க இந்த மென்பொருளை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்.
 
இதற்கு எல்லாம் மென்பொருளா?சாதாரணமாக ஒரு Hidden செய்தால் போதும்தானே அல்லது அந்த நேரத்தில் குறிப்பிட்ட பைலை அழித்து விட்டு அல்லது cut செய்து வைத்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை என்று நீங்கள் நினைக்கலாம் இது நமக்கு சிறமத்தைத்தான் ஏற்படுத்தும்.சரி இன்றை மென்பொருளை சற்று பார்ப்போம்.

01.இந்த மென்பொருளை கணினியில் பதிய வேண்டிய அவசியம் இல்லை

02.இதற்குறிய password முற்றிலும் வித்தியாசமானது அதாவது இங்கு password ஆக பயன்படுவது Text Document ஆகும்.என்ன புரிய வில்லையா?உங்களுடைய folder ஐ திறக்க வேண்டும் என்றால் Right click செய்து New > New Text Document  இந்த பைலை உருவாக்கினால் தான் உங்களுடைய folder open  ஆகும்.

பயன்படுத்தும் முறை

முதலில் download செய்து கொள்ளுங்கள்

உங்களுக்கு விரும்மிய இடத்தில் இதனை நிறுவிக்கொள்ளுங்கள்

Folder Personal என்பதனை open செய்யவும், ஏதாவது ஒரு கீயை அழுத்தவும்.

இப்போது Personal என்ற ஒரு Folder  உருவாகி இருக்கும், அதில் முக்கியமான பைல்களை கொப்பி செய்து விட்டு folder  ஐ மூடி விடுங்கள்.

மீண்டும் Folder Personal என்பதனை open  செய்து, ஏதாவது ஒரு கீயை அழுத்தவும் அந்த Folder Lock ஆகிவிடும்.

Unlock செய்வதற்கு குறிப்பிட்ட இடத்தில் அதாவது Folder Personal.exe  இருக்கும் இடத்தில்  New Text Document    இந்த பைல் இருந்தால் மாத்திரமே Unlock செய்து கொள்ள முடியும்.

இந்த மென்பொருளை பயன்படுத்தி ஐந்து முறை மாத்திரமே unlock செய்து கொள்ள முடியும்.அடுத்த முறை unlock செய்யும்போது Register பன்ன வேண்டும் என்ற செய்தி தோன்றும் என்பதனை மறந்து விடாதீர்கள்.

குறிப்பு இந்த மென்பொருள் பற்றி உங்கள் கருத்துக்களை கேட்டு அறிந்து கொள்வதற்காகவே நான் ஐந்து முறை Unlock  செய்ய வாய்ப்பு வழங்கி உள்ளேன்.இந்த மென்பொருள் பற்றி உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளவும் விரைவில் மேன்படுத்தப்பட்டு உங்கள் கைகளுக்கு வரும்.
யாரும் தங்களுடைய முக்கியமான பைல்களை இட்டு பரிசோதிக்க வேண்டாம் சும்மா ரை ஒன்று பன்னி பாருங்க..ஓகே...

4 comments Blogger 4 Facebook

  1. ஆம் ...

    ஆனால் பாதுக்காப்பு இல்லை என்று நினைக்கிறேன்.

    இந்த தகவல் தெரிந்தவார்கள் யார் வேண்டுமாயினும் ஓபன் செய்யலாம் அல்லவா .....

    ReplyDelete
  2. ஆம்,நிச்சயமாக தெரிந்தவர்கள் ஓபன் செய்யலாம்

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top