நிபந்தனையின் அடிப்படையில் ஒரு Cell Range இன் கூட்டுத்தொகை ஒன்றை காண்பதற்கு SUM IF  Function ஆனது துனைபுரியும்.

SUMIF Function இன் Syntax

SUMIF(range,criteria,[sum_range])

இங்கு Arguments ஆனது மூன்றாக வரையறுக்கப்பட்டு காணப்படுகிறது.அதில் முதல் இருக்கும் இரண்டு Arguments கட்டாயம் வழங்க வேண்டும்.


Range :- நிபந்தனை எந்த தொகுதியில் காணப்படுகிறதோ அந்த Cell Range இனை இங்கு கொடுக்கவும்.

Criteria :- நிபந்தனையை இங்கு கொடுக்கவும்.(கட்டாயம் Comparison Operator பயன்படுத்த வேண்டும். Arithmetic Operator பயன்படுத்த முடியாது.)

Note:- இதற்கு வேறுபெயர்களும் இருக்கிறது Condition , Logical Test என்றாலும் இதனையே குறிக்கும்.

SUM Range :- உங்கள் நிபந்தனை வேறு ஒரு Column இலும் கூட்ட வேண்டிய தொகை வேறு ஒரு Column இலும் மாத்திரம் காணப்பட்டால் இதில் கூட்ட வேண்டிய Cell Range வழங்குவது கட்டாயம் ஆகும்.

Comparison Operators


கீழ்கானும் Operator இனை பயன்படுத்தி இரண்டு தரவுகளை ஒப்பீட்டு பார்க முடியும். இதனுடை வெளியீடு  True அல்லது False ஆக காணப்படும்.

= (equal sign) Equal to
1=1
ஒன்றானது ஒன்றுக்கு சமனா?  ஆம் (True)

> (greater than sign) Greater than
10 > 20
இருபதிற்கு மேற்பட்டதா பத்து? இல்லை (False)


< (less than sign) Less than
10 < 20
இருபதிற்கு உட்பட்டதா பத்து? ஆம் (True)

>= (greater than or equal to sign) Greater than or equal to

இங்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன.முதலாவது பெரிதா என்று பார்கும் இல்லை என்றால் மட்டுமே அடுத்த நிபந்தனை  சமனா ? என்று பார்கும்.

10>=10
பத்தை விட பெரிதா பத்து? இல்லை, அல்லது பத்திற்கு சமனா பத்து? ஆம் (True)

<= (less than or equal to sign) Less than or equal to

இங்கும் இரண்டு நிபந்தனைகள் உள்ளன.

5<=10
பத்திற்கு உட்பட்டதா ஐந்து?ஆம் (True)

<> (not equal to sign) Not equal to -  அடுத்த பதிவில் இறைவன் நாடினால்  சொல்கிறேன்.இப்போது இந்த Comparison Operator இனை எப்படி Sumif இற்குல் பயன்படுத்துவது என்று பார்போம்.

அருகில் காணப்படும் படத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்.இதில் 50 இற்கு மேற்பட்ட புள்ளிகளை மட்டுமே கூட்டி அதன் கூட்டுத்தொகையை B7 இல் காட்டவேண்டுமாயின் =SUMIF(B2:B6,">50") என டைப் செய்தால் போதும்.

Note:- ஏற்கனவே வழங்கிய Arguments இல் "" (double quote) பயன்படுத்தப்படவில்லை ஆனால் இங்கு பயன்படுத்தப்படுகிறது. Text இற்கு கட்டாயம் Double Quote போட வேண்டும்.  Number, Boolean Expression (True or False), function, Cell Address இற்கு மற்றும் Comparison Operator இற்கு தேவையில்லை (பொரும்பாலும்  Comparison Operator இற்கு Double Quote தேவையில்லை சில Function இனை தவிர ) மேலே உள்ள உதாரணத்தில் Criteria ஒரு Column (A) இலும் அதன் எண்னிக்கை இன்னுமொரு Column (C) இலும் காணப்படுகிறது. இதில் அப்பிள் பழம் எத்தனை உள்ளது என பார்போம்.

=SUMIF(A2:A7,"=Apples",C2:C7)
வெளியீடு 69

Note:- Criteria வில் சமனானதை தேடும் போது இந்த function இல் கட்டயாம் = போடனும் என்றில்லை ஏனென்றால் நீங்கள் போடாவிட்டாலும் சமனானதை மட்டுமே அது காட்டும்.   ஆனால் இது எல்லா function இற்கும்  பொருந்தாது.மறக்காமல் Share செய்யுங்கள். 

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top