பல ஆண்டுகளுக்கு பின் உங்களை எனது இணையதளத்தின் ஊடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.Android mobile பயன்படுத்தாத நபர்களே இன்று இல்லை என்று கூறலாம். இன்று மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள Google இன் Operating System தான் இந்த Android. 


ஆரம்பத்தில் இதை பயன்படுத்த பலர் தயங்கினாலும் (Nokia ரசிகர்கள்) பின் இதனுடைய User interface இனாலும் App Market (தற்போதைய Play Store) இல் Android இற்கு என்று பிரத்தியோகமாக கிடைத்த Application இனாலும் மக்கள் மத்தியில் குறுகிய காலத்தில் வேகமாக இது வளர்ச்சி அடைந்ததை காணலாம்.

இருந்தும் இதை பயன்படுத்தும் சிலர் தொட்டதுக்கெல்லாம்  Play Store இற்கு சென்று Application ஐ Install செய்து வைத்திருப்பார்கள்.ஒரு சில சின்ன சின்ன வேலைகளை எந்த Apps உம் இல்லாமல் மிக இலகுவாக நாமலே அதை செய்யலாம் அதைத்தான் இனிவரும் காலங்களில் நாம் பார்க்க இருக்கிறோம். அதில், முதல் கட்டமாக Folder and File களை hide செய்வது எப்படி என்று கூறுகிறேன்.

இது மிகவும் இலகுவான ஒன்று,மறைக்க விரும்பும் Folder இன் name இற்கு முன் "." (dot) என்பதை சேர்த்தால் போதுமானது.உதாரணமாக உங்களுடைய Folder இன் name personal என்றால் அதை இவ்வாறு Rename செய்ய வேண்டும்  .personal  இப்போது அந்த Folder காணாமல் போனதை அவதானிப்பீர்கள்.அதை தெரியவைப்பதற்கு , File Manager ஐ Open செய்து settings சென்று show hidden files என்தற்கு tick செய்யவும்.

அடுத்த முறை Media File (Image,Audio ,Video) களை Gallery இல் காட்டாமல் செய்ய .nomedia என்ற file இனை மறைக்க விரும்பும் Folder இற்குல் create செய்தால் போதும் அந்த Folder இற்குல் இருக்கும் Media File அனைத்தும் Gallery இல் காணாமல் போவதை அவதானிப்பீர்கள்.

உங்கள் phone இல்  file Manager ஊடாக .nomedia file இனை  create செய்வது கடினம் என்றால் (ES File Explorer இல் செய்யலாம் அல்லது notepad இல் எதுவும் Type செய்யாமல் save இற்கு சென்று Save as type இற்கு All file என்பதை Select செய்து File name இற்கு .nomedia என்று கொடுத்து உருவாக்கிக்கொள்ளுங்கள்) phone memory அல்லது SD Card (Memory Card) இற்குல் சென்று,  Android என்ற folder இனை open செய்யுங்கள் பின் அதற்குல் இருக்கும்  Data என்ற folder இனை Open செய்யுங்கள் அதற்குல் .nomedia file இருக்கும் அதை copy செய்து மறைக்க விரும்பும் folder இற்குல் paste செய்யுங்கள்.அவ்வளவுதான்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top