இன்று நாம் VBஇல் பார்க்க இருப்பது எப்படி ஒரு Function ஐ உருவாக்குவது என்று பார்ப்போம்.சரி VBஇல் மொத்தமாக  எத்தனைFunction உள்ளது ? என  முதலில் தெரிந்து  கொள்வோம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது Code எழுதும் பகுதியில் வைத்து,  windows + space களை ஒரே நேரத்தில் press பனன்னவும்.இப்போது VBஇல் உள்ள அனைத்து Function களும் தோன்றும்.அதில் நாமும் ஒரு Function  ஐ எப்படி இணைப்பது என்று இப்போது பார்ப்போம்.


இரண்டு விதமாக ஒரு Function ஐ உருவாக்க முடியும்.முதலாவது General பகுதியில்

Function Nimzath என்று எழுதிய பின்னர் (Nimzath என்பதற்கு பதிலாக நீங்கள் விரும்பும் பெயரை மாற்றிக்கொள்ளவும்)  Enter Key ஐ அழுத்தவும்,பின்வருமாறு காட்சியளிக்கும்.

Function Nimzath()

End Function

இந்த Function  இல் தேவையானதை எழுதிக்கொள்ளுங்கள்.உதாரணமாக

Function Nimzath()
    MsgBox "Welcome to nimzath.blogspot.com", vbInformation, "Nimzath"
End Function


இதில் நீங்கள் கவணிக்க வேண்டியது என்னவென்றால்  Form1 , General பகுதியில் Function Nimzath என்று உருவாக்கினால் அந்த Function  ஐ Form1  இல் தான் பயன்படுத்தி கொள்ள முடியும். அந்த Function  ஐ Form2 இல் பயன்படுத்த முடியாது.

.இரண்டாவது முறை Module

இதற்கு நீங்கள் ஒரு Module உருவாக்க வேண்டும்.


இதில் நீங்கள் விரும்பும் பெயரில் ஒரு Function ஐ உருவாக்கவும்

Function Nimzath()

End Function

இதில் தேவையானதை எழுதி கொள்ளுங்கள்.இரண்டாவது முறையில் என்ன நண்மை என்றால் ஒரே Code ஐ ஒரே Project இல் திரும்ப திரும்ப எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை அந்த Code ஐ இப்படி ஒரு Function  இல் உருவாக்கி வைத்துக்கொண்டால் போதும்.உதாரணமாக,

Programe ஐ நிறுத்துவதற்கு End அல்லது Unload me ஐ பயன்படுத்துவோம்.இதை கொஞ்சம் மெருகூட்டி அதாவது வெளியேறவா? என்ற ஒரு செய்தியை பயன்படுத்துவோருக்கு தெரிவித்து அவர் ஆம் என்றால் எப்படி நிறுத்துவது என்று பார்ப்போம்.

( Module1 )

Function Nimzath()

    a = MsgBox("Do you really want to Exit Project1? ", vbYesNo + vbQuestion, "Exit")
    If a = vbYes Then
        End
    Else
        Form1.Show
    End If
  
End Function

( Form1 )

Private Sub cmdExit_Click()
    Nimzath
End Sub

Private Sub Form_Unload(Cancel As Integer)
    Nimzath
End Sub

இது எவ்வளவு இலகுவானது பார்த்தீர்களா? நீங்கள் உருவாக்கிய Function இன் பெயரை எழுதினால் மட்டும் போதும்.மேலும் சில Function கள் அடுத்த பதிவில்.....

3 comments Blogger 3 Facebook

 1. எம் போன்ற ஐரி மாணவர்கலுக்கு மிகவும் உபயோகமான சிறந்த பதிவு...
  பகிர்வுக்கு ரொம்ப நன்றி

  ReplyDelete
 2. தரமான பதிவு நண்பரே... தெளிவான விளக்கத்துடன் கொடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துகளுடன் நன்றிகளும்...

  ReplyDelete
 3. Private Sub Form_Unload(Cancel As Integer)
  Nimzath
  End Sub

  இதனை இப்படி எழுதிக்கொள்ளவும்

  Private Sub Form_Unload(Cancel As Integer)
  Cancel = 1
  Nimzath
  End Sub

  ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top