Desktop இலுள்ளMy Computer Icon மீது Right Click செய்து வரும் Context Menuவில் Properties என்ற தெரிவை கிளிக் செய்யும்போது வரும் System Properties எனும் தலைப்பிலமைந்தDialog Box இல் General Tab இன் கீழ் நீங்கள் நிறுவியுள்ள விண்டோஸின் பதிப்பு,பதிவு விவரம்,Processor வகை மற்றும் அதன் வேகம் நினைவகத்தின் கொள்ளளவு போன்ற தகவல்களைக் காணலாம்.


இவற்றில்,கணினி தயாரிப்பு நிறுவனம்,கணினியின் மாதிரி இலக்கம்,அதனுடன் இணைந்த சிறிய படம் (இலட்சினை) மற்றும் அதன் கீழ் காணப்படும் Support Information எனும் Button கிளிக் செய்ய வரும் Dialog box  இல் தோன்றும் விவரங்கள் போன்றவை OEM தகவல்கள் எனப்படும்.


OEM என்பது Original Equipments manufacturer என்பதன் சுருக்கமாகும்.ஏதேனுமொரு பொருளை உற்பத்தி செய்யும் (வன்பொருள்/மென்பொருள்) முதன்மை நிறுவனம் அப்பொருளை நேரடியாக வாடிக்கையாளரிடம் கொண்டு செல்லாமல் வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைத்து விடும்.இரண்டாவது நிறுவனம் அப்பொருளை மேலும் மேம்படுத்தி தனது பெயரில் பொதி செய்து வாடிக்கையாளர்களை அடையச் செய்யும்.எனினும் நேர்மாற்றமாக OEM என்பது இரண்டாவது நிறுவனத்தையே குறித்து நிற்கிறது.

இவ் OEM தகவல்கள் அனைத்தும் .ini என்ற file வடிவமைப்பில் கணினியில் சேமிக்கப்படுகின்றன.இதனை Notepad  போன்ற Text Editor  கொண்டு மாற்றியமைக்கலாம்.

இந்த  File  ஆனது [General],[Support Information] எனும் இரு பகுதிகளைக் கொண்டிருக்கும்.

இந்த இரு பகுதிகளிலும் இருக்க வேண்டிய தரவுகளை அமைத்தவுடன் அதனை oeminfo எனும் பெயரில் .ini எனும் File வடிவில் சேமித்து Windows Folder இல் உள்ளSystem32 எனும்  sub folderfகுள் சேமிக்க வேண்டும்.(C:\WINDOWS\system32\oeminfo.ini)

அதனுடன் உங்கள் நிறுவன இலட்சினை(Logo) தோன்றச்செய்ய வேண்டுமாயின் ஏதேனுமொரு Photo Editing மென்பொருள் கொண்டு நீங்கள் போட விரும்பும் படத்தின் அளவு 120 x 120 pixel  இல் இருக்கத்தக்கதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.பின்னர் அதனை oemlogo எனும் பெயரில் .bmp(Bitmap) Format  இல் சேமித்து அதனை cut  செய்து மேற்சொன்ன அதேSystem32 Folder க்குள் Paste செய்து சேர்க்க வேண்டும்.இப்போது Key board இல் windows key உடன்  Pause Key ஐ அழுத்த System properties Dialog box இல் உங்கள் கை வரிசையைக் காணலாம்.


Notepad ஐத் திறந்து கீழுள்ளதை மாதிரியாகக் கொண்டு Type செய்து oeminfo.ini எனும் பெயரில்   C:\windows\system32 எனுமிடத்தில் சேமிக்கவும்

[General]
Manufacturer = MN COMPUTER SYSTEM
Model = Desktop

[Support Information]
Line1=Visit Our Website
Line2=
Line3= http://www.nimzath.blogspot.com
Line4=
Line5=Contact us
Line6=+94 0772187898
Line7=nimzath2010@gmail.com

(=என்ற அடையாளத்திற்கு வலப்பக்கம் உள்ள விபரங்களை நீங்கள் விரும்பியது போன்று மாற்றிக் கொள்ளலாம்.)

மேற்சொன்ன செயன்முறை கடினமென நினைப்பவர்கள் OEMLOGO எனும் 225KB அளவுள்ள சிறிய இலவச  Utility ஐ Download செய்து அதன் மூலமும்  Logo மற்றும் அது சார்ந்த தகவல்களை விருப்பம் போல் இலகுவாக மாற்றியமைக்க முடியும்.

1 comments Blogger 1 Facebook

  1. அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top