Unicode இல் டைப் செய்ய அருமையான ஒரு மென்பொருளை இன்று உங்களுக்கு அறிமுகப்படுத்த போகிறேன்.இதன் சிறப்பம்சம் என்னவென்றால் ஒரு MB கூட இல்லாத இந்த மென்பொருளில், பல வசதிகள் இருப்பதுதான்.


இதில் உள்ள சில வசதிகள்...




01. 10 இந்திய மொழிகளில் டைப் பன்ன முடியும், அதில் தமிழும் ஒன்று

02.தேவையான இடத்தில் நேரடியாக டைப் செய்யலாம் (வேறு ஒரு இடத்தில் டைப் செய்து அதை கொப்பி செய்து, பேஸ்ட் பன்ன வேண்டிய  அவசியமில்லை) 

03. Region Settings ,  Windows XP இல் செய்யாவிட்டால் Unicode இல் எழுதப்பட்ட அனைத்தும் பெட்டி பெட்டியாக வரும், இதை  சாி செய்ய Windows XP CD வேண்டும், ஆனால் CD இல்லாமல் அந்த வேலையை இந்த மென்பொருள் செய்யும்.

04.இலகுவாக தமிழில் டைப் செய்ய 5 முறைகள் உள்ளது.அதில் எது உங்களுக்கு இலகுவாகதாக இருக்கிறதோ அதை தொிவு செய்துவிட்டு டைப் செய்ய ஆரம்பிக்கலாம்.



05.டைப்செய்வதற்கு keyboard layout (எந்த கீ யை டைப் செய்தால் என்ன எழுத்து வரும் என்று ) தொியாவிட்டால் On Screen Keyboard ஐ பாா்த்து டைப் செய்யலாம்.





06.நீங்கள் ஒரு எழுத்தை டைப்செய்து விட்டீா்கள் என வைத்துக்கொள்ளுங்கள். அதை இன்னுமொரு எழுத்தாக மாற்ற நினைக்கிறீா்கள், அதற்கு எந்த கீ யை அதை தொடா்ந்து டைப் செய்ய வேண்டும் என்று, Key Preview மூலம் காணமுடியும்.உதாரணமாக "ம" என டைப் செய்துவிட்டால் அதை " ம்  , மி , மீ , மா "  போன்று மாற்றுவதற்கு,



இதை பற்றி அதிகம் கூற நான் விரும்பவில்லை! பயன்படுத்துவது மிக இலகுவானது முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்கே புாியும்.

Download செய்ய இங்கு செல்லவும்.


பிடித்து இருந்தால் நண்பா்களுடன் பகிா்ந்து கொள்ளுங்கள்.


13 comments Blogger 13 Facebook

  1. நான் இதைத்தான் வெகு நாளாக உபயோகப்படுத்துகிறேன்.

    ReplyDelete
  2. இங்குள்ள இந்த மென்பொருள் விண்டோஸ் 7 32 bit க்கு சப்போர்ட் ஆகுமா?

    ReplyDelete
    Replies
    1. சப்போர்ட் ஆகும் (Windows 8 இற்கு வேலை செய்யும் போது Windows 7 இற்கு வேலை செய்யாத என்ன?)

      Delete
  3. நன்றி நன்றி....நன்றி

    ReplyDelete
    Replies
    1. நம்மெல்லாம் ஒரே கன்றி நமக்குள்ள எதற்குப்பா இந்த நன்றி!(உங்கள் வருகைக்கு மிக்க நன்றி!)

      Delete
  4. நன்றி நன்றி
    i want to know...how to get international banking account like paypal or other.i don;t have credit card but i have hnb international visa debit card plz heip me..plz tell what u using..thanks

    ReplyDelete
    Replies
    1. Paypal என்பது இணைத்தில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள உதவும் ஒரு பாிமாற்று ஊடகம்.

      உங்கள் HNB Visa Card இனை இதில் பயன்படுத்தி இணைத்தில் ஏதாவது பொருட்கள் அல்லது சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

      இந்த முறை பொதுவாக அனைவராலும் இணைத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.

      இங்கு சென்று Paypal ஒரு கணக்கை திறந்து கொள்ளுங்கள்.இது முற்றிலும் இலவசமானதே!

      Delete
  5. மிகவும் பயனுள்ள தகவல் நண்பா...! மிக நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த மென்பொருள். மிக்க நன்றி!

    உங்கள் மனதில் எழும் தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகள் எதுவாக இருந்தாலும் அதற்கான பதிலை வழங்க ஒன்லைன் பதில்! தளம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை வந்து பாருங்கள். பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களிடமும் அறிமுகம் செய்யுங்கள்.

    இதோ ஒன்லைன் பதில்! தளத்திற்கான சுட்டி:
    ஒன்லைன் பதில்!(www.onlinebathil.blogspot.com)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
      இந்த சேவை தொடர எனது வாழ்த்துக்கள்!

      Delete
  6. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. நான் இதைத்தான் பயன்படுத்துகின்றேன். எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஆனால் இதில் latha என்ற fontஐ தவிற வேறு font style மாற்ற முடியவில்லையே... அது மட்டும் தான் எனக்கு பிரச்சனையாக உள்ளது. அதை வைத்து நான் design work எதுவும் என்னால் செய்ய முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. அதில் இதை செய்ய முடியாது!

      அதற்கு என்று வேறு தமிழ் Font உள்ளது! அதை வைத்து விரும்பிய வடிவில் தமிழில் எழுதிக்கொள்ள முடியும்.

      தேவையென்றால் இங்கு சென்று Download செய்து கொள்ளுங்கள்

      https://www.mediafire.com/download/auor6rrb79d2tuc/Tamil.rar

      Delete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top